×
Saravana Stores

ரோவர் வேளாண். கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்ட நாள்

 

பெரம்பலூர், செப். 25: பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்ட நாள் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ரோவர் கல்விக்குழும மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். பிரம்மதேசம் ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்டம் பற்றி பேசினார். கல்லூரி முதல்வர் சந்திரசேகர் மற்றும் இயக்குநர் வஹாப் ஆகியோர் நாட்டு நலப்பனித் திட்டத்தின் நோக்கம், நன்மைகள் பற்றி விரிவாக பேசி சிறப்புரையாற்றினர். சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் ரத்த தானம் செய்தனர்.

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரி வளாகத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டும் வளாகத்தை சுத்தம் செய்தும் நலப்பணிகளை மாணவர்கள் செய்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமதாஸ் வரவேற்று பேசினார். கல்லூரியின் உதவிப் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் செல்வன். வினோத்குமார் நன்றி கூறினர். கல்லூரி நிர்வாக அலுவலர் ஜெயசீலன் மற்றும் அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தினர்.

The post ரோவர் வேளாண். கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்ட நாள் appeared first on Dinakaran.

Tags : Rover ,Agriculture ,National Service Project Day ,Perambalur ,National Welfare Project Day ,Rower College of Agriculture ,Varadarajan ,President ,Rover Education Committee ,Vice President ,John Ashok Varadarajan ,Brahmadesam Panchayat ,Community service day in ,Dinakaran ,
× RELATED ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்...