×

ஆஷஸ் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா: 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஸ்காட் போலண்ட் அசத்தல்!!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 68 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. முதலில் பந்துவீச, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து,  முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 267 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டார்க் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 4, ராபின்சன், வுட் தலா 2, ஸ்டோக்ஸ், லீச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 82 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றும் இதனால் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் மளமளவென சரிந்தன.இறுதியில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 68 ரன்னுக்கு சுருண்டது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இரட்டை இலக்கை தொட்டனர், மற்றவர்கள் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர்.இதன்மூலம் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றிருந்ததால் ஆஷஸ் தொடரில் 3-0 என கைப்பற்றி அசத்தியது.ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் 4 ஓவர் வீசி வெறும் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டு வீழ்த்தினார்….

The post ஆஷஸ் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா: 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஸ்காட் போலண்ட் அசத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Australia ,Ashes Cup ,Scott Bolland ,Melbourne ,England ,Tour ,Scott Boland ,Dinakaran ,
× RELATED பப்புவா நியூ கினியா நிலச்சரிவில்...