- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தலைமை நீதிபதி
- விக்டோரியா கோவ்ரி
- பாலாஜி
- ராமகிருஷ்ணன்
- தின மலர்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2023ம் ஆண்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி மற்றும் திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது.
இதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து 5 கூடுதல் நீதிபதிகள் நேற்று காலை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.நீலகண்டன், பி.குமரேசன், பி.முத்துக்குமார்,
அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், மெட்ராஸ் பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு நிரந்தரம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
The post சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு appeared first on Dinakaran.