×

சுவிட்சர்லாந்தில் தற்கொலை இயந்திரத்தின் மூலம் ஒரு நிமிடத்தில் மரணம்


ஜெனீவா: வடக்கு சுவிட்சர்லாந்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தற்கொலை கேப்ஸ்யூரில் ஒருவர் இறந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பாக ஏராளமானவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உலகிலேயே முதல் முறையாக சுவிட்சர்லாந்தில் சார்கே என்ற நிறுவனம் ஒரு நிமிட வலியில்லா மரண இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலமாக ஒருவர் 5 நிமிடங்களில் வலியில்லாமல் உயிரிழக்க முடியும். சீல் செய்யப்பட்ட அறைக்குள் நைட்ரஜன் வாயுவை செலுத்தி ஒரு சுவிட்சை ஆன் செய்தால் உள்ளே இருக்கும் நபர் தூங்கிவிடுவார் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டு சில நிமிடங்களில் இறந்து விடுவார்.

மெரிஷாவுசென் பகுதியில் வனத்துறை அறைக்கு அருகே தற்கொலை கேப்ஸ்யூலை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தற்கொலை செய்து கொள்வதற்கு உதவியதாக சந்தேகத்தின்பேரில் பலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

The post சுவிட்சர்லாந்தில் தற்கொலை இயந்திரத்தின் மூலம் ஒரு நிமிடத்தில் மரணம் appeared first on Dinakaran.

Tags : Switzerland ,Geneva ,northern Switzerland ,Charke ,Dinakaran ,
× RELATED விஜய் பட டான்ஸ் மாஸ்டரின் புது பாய்ச்சல்