×

வாலாஜாபாத் ஒன்றியத்தில் மருத்துவ முகாம்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகளில் பணி புரியும் தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்கள், பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளின் ஊக்குவிப்பாளர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஒன்றிய துணைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார், வட்டார மருத்துவ அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். முகாமினை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

முகாமில் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் சிகிச்சை, பல் சிகிச்சை, சித்த மருத்துவம் உள்ளிட முழு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், 61 ஊராட்சிகளை சார்ந்த 276 தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சஞ்சய்காந்தி அமலிசுதாமுனுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், காஞ்சனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவக் குழுவை சார்ந்த செவிலியர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post வாலாஜாபாத் ஒன்றியத்தில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Walajahabad Union ,Walajahabad ,Kanchipuram District ,Walajahabad Union Panchayat Office ,Waljahabad Union ,Dinakaran ,
× RELATED தொடர்மழை காரணமாக மாகரல் செய்யாற்றில்...