×
Saravana Stores

காரணமின்றி பணியிடை நீக்கம் செய்வதை கண்டித்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், காரணம் இன்றி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வதை கண்டித்து, ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்தல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சு.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொய்யாமொழி வரவேற்று பேசினார். மண்டல மகளிர் அணி செயலாளர் கோமதி, மண்டல செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் சங்கர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சொர்ண லட்சுமி, மாவட்ட தலைமையிட செயலாளர் ராஜீவி, மாவட்ட அமைப்பு செயலாளர் லிங்கேஸ்வரன், கிழக்கு மாவட்ட தலைவர் வாசுதேவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில பொதுச் செயலாளர் மு.எழிலரசன் கலந்துகொண்டு கடந்த ஓர் ஆண்டாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை ஆனது அடிப்படை காரணங்கள் ஏதும் இன்றி பணி மாறுதல், செய்தல், பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும் மற்றும் மாணவர் நல திட்டத்திற்கு தனி அலுவலர் நியமிக்க கோரியும் வலியுறுத்தி கண்டித்து பேசினார்கள். இதில் மேற்கு மாவட்ட தலைவர் அனந்தகுமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post காரணமின்றி பணியிடை நீக்கம் செய்வதை கண்டித்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Tamil Nadu High School Head Teachers' Association ,
× RELATED காஞ்சிபுரம் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து: 28 பேர் படுகாயம்