சென்னை: பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக இயக்குநர் மோகன் மீது பழனி கோயில் நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. இயக்குநர் மோகன் மீது பழனி காவல்நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் . அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த நிலையில், பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தொடர்பாக மோகன் சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக கூறப்படுகிறது.
மோகன் பேசிய வீடியோ வைரலான நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார். திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகயை கைது செய்தனர். இதையடுத்து, பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பி கைதான திரைப்பட இயக்குனர் மோகன் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் ஜாமின் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் ஜாமினில் விடுவிப்பு appeared first on Dinakaran.