×
Saravana Stores

மண்டபம் அருகே 200 கிலோ கடல் ஆமை கரை ஒதுங்கியது

Seaturtle,Mandapamமண்டபம் : மண்டபம் அருகே வேதாளை கடலோர பகுதியில், இறந்த நிலையில் 200 கிலோ கடல் ஆமை கரை ஒதுங்கியது. மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வசித்து வருகின்றன. ஆழ்கடல் பகுதியில் விசைப்படகுகள், பெரிய கப்பல்கள் செல்லும்போது, மோதும் மீன்களில் சில காயமடைந்து, கடலில் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கம்.

அதுபோல் மண்டபம் அருகே வேதாளை சிங்கிவலைகுச்சு கடலோரப்பகுதியில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. தகவலறிந்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர். அப்போது 200 கிலோ எடையுள்ள 30 வயது ஆண் கடல் ஆமை இறந்த நிலையில், உடலில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும். ஆமை அழுகிய நிலையில் இருந்ததால், எப்போது அடிபட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அப்பகுதியில் மணலில் குழி தோண்டி புதைத்தனர்.

The post மண்டபம் அருகே 200 கிலோ கடல் ஆமை கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Vedalai ,Gulf of Mannar ,Dinakaran ,
× RELATED மண்டபம் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை