×

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் ரூ30.50 கோடியில் மினி டைடல் பூங்கா: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்

தஞ்சாவூர், செப்.24: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் ரூ.30.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை நேற்று காணொளி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து டைடல்பார்க் திறப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் 3.40 ஏக்கர் பரப்பளவில் 55,000 சதுர அடியில் ரூ.30.50 கோடி மதிப்பில் 4 அடுக்கு மாடி கட்டிடமாக மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிட திறப்பு விழா காணொளி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திறப்பு விழாவில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர்கள் சண்.ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வம் , மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன். வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, டைடல் செயற்பொறியாளர் ஜெயமணி மௌலி , மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், டைடல் பூங்கா உதவி பொறியாளர் கோபி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். 3.40 ஏக்கர் பரப்பளவில் 55,000 சதுர அடியில் ரூ.30.50 கோடி மதிப்பில் 4 அடுக்கு மாடி கட்டடமாக டைடல் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதன் மூலம் படித்த இளைஞர்கள் சுமார் 500 பேருக்கு மென்பொருள் வல்லுனர்களாகவும், சுமார் 600 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெற உள்ளதால், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் ரூ30.50 கோடியில் மினி டைடல் பூங்கா: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mini Tidal Park ,Pilliyarpatti ,Thanjavur ,Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,M.K.Stalin ,Industry Promotion and Commerce Department ,Pillayarpatti Panchayat of ,Thanjavur District ,Tidal Park ,Dinakaran ,
× RELATED தஞ்சை,சேலம் மினி டைடல் பூங்காகளை ...