×

அரையாண்டு விடுமுறை எதிரொலி: சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!!

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 6 செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவே உள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மக்கள் தங்களின் தொழில் விருத்தி, பதவி உயர்வு, குழந்தைபேறு, திருமண வரன் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக இந்த கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வருவது வாடிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளும் அருகிலுள்ள ஆரணி காவல்துறை, கோவில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்த வாரம் அரையாண்டு விடுமுறை மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், கோவில்களில் பக்தர்களுக்கான அனுமதி எங்கு ரத்து செய்யப்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் இந்த வாரமே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. 1,000-ற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் காலையிலிருந்தே குவிந்து வருகின்றனர். அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து, நீண்ட வரிசையில் நின்று, காத்திருப்பு மண்டபத்தில் குவிந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வெளியில் செல்ல 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும், காத்திருப்பு மண்டபத்தில் மக்கள் சமூக இடைவெளியின்றியும், முக கவசம் அணியாமலும் குவிந்து வருகின்றனர். மக்கள் கூட்டம் காரணமாக சிறுது நேரம் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.     …

The post அரையாண்டு விடுமுறை எதிரொலி: சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!! appeared first on Dinakaran.

Tags : Churuvapuri Murugan Temple ,Thiruvallur ,Arulmigu ,Balasubramaniar ,Churuvapuri village ,Bonneri, Thiruvallur district ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி