- திருவண்ணாமலை
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்
- ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா
- வைஷ்ணவம்
ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.24: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் சாலைகளில் வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். எனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சாலையானது மாநில நெடுஞ்சாலை துறை வசமுள்ள முக்கிய மாவட்ட சாலை ஆகும். இச்சாலையில் விபத்தினை தவிர்க்க ஆங்காங்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிகின்றனர். திருவண்ணாமலை சாலைகளில் உள்ள வேகத்தடைகளுக்கு ஒளிரும் வகையிலான வண்ண பூச்சுகள் நெடுஞ்சாலை துறையினர் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.
The post திருவண்ணாமலையில் வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி appeared first on Dinakaran.