- ஜி.கே.
- வாசன்
- உலக செஸ் ஒலிம்பியாட்
- சென்னை
- Tamaga
- ஜனாதிபதி
- ஜி.கே.வாசன்
- குகேஷ்
- பிரக்யானந்தர்
- அர்ஜுன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் தங்கம் வென்றது மகிழ்ச்சிக்குரியது. தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிராக்யானந்தா மற்றும் அர்ஜுன் ஆகியோர் தாங்கள் விளையாடிய போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதேபோன்று, மகளிர் பிரிவில் இந்திய குழு அஸர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் ஹரிக்கா, திவ்யா, வனிதா வெற்றியைப் பெற வைஷாலி ட்ரா பெற்றார். இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது.
இதேபோன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா தனி நபர் பிரிவில் தங்கம் கைப்பற்றி உள்ளனர். ஆண்கள் பிரிவில் குகேஷ், பிராக்யானந்தா, அர்ஜுன் மற்றும் பெண்கள் பிரிவில் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டின் பெருமையை உலக நாடுகளில் நிலைநாட்டி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் புகழ் சேர்த்துள்ளனர். வரலாற்று சாதனை படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களை தமாகா சார்பில் பாராட்டுகிறேன்.
The post உலக செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு ஜி.கே.வாசன் பாராட்டு appeared first on Dinakaran.