- SA மனித சங்கிலி
- உலக ஓசோன் தினம்
- கல்லூரி
- கலை மற்றும் அறிவியல்
- திருவள்ளூர்
- எஸ்.ஏ.
- திருவேக்காட்
- பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலை
- சென்னை
- கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- உன்னத் பாரத் அபியான்
- தேசிய சேவை திட்டம்
- கல்லூரி அதிபர்
- பி.வெங்கடேஷ்ராஜா
- SA மனித
திருவள்ளூர்: சென்னை அடுத்த பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உன்னத் பாரத் அபியான் மற்றும் தேசிய சேவைத் திட்டத்துடன் இணைந்து, கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின் பேரில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கல்லூரி நுழைவாயிலில் மனிதச் சங்கிலி நடத்தியது.
இதில் 200 மாணவர்கள் பங்கேற்றனர், அவர்கள் மாண்ட்ரீல் நெறிமுறை, ஓசோன் சிதைவு மற்றும் காலநிலை நடவடிக்கை பற்றிய ஆக்கப்பூர்வமான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி மனித சங்கிலியில் ஈடுபட்டனர். ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், கார்பன் தடயங்களைக் குறைப்பதன் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்ச்சி எடுத்துரைத்தது.
The post எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மனிதச்சங்கிலி appeared first on Dinakaran.