- திருப்பணியானி கோவில்
- திருத்தணி
- திருத்தணி முருகன் கோயில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முருகன் கோயில்
- திருத்தணி
- அன்னதனா ஹால்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான கூடத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில், உணவு தயாரிப்பு கூடம் மற்றும் உணவு அருந்தும் மையத்தில் ஜன்னல்களுக்கு கொசுவலை அமைக்கப்பட்டது. திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அண்ணதானம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின்னர் கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தப்பட்டது. அந்த வகையில் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 2022ம் ஆண்டு முழுநேர அன்னதான திட்டம் செயல்பட தொடங்கியது. சாதாரண நாட்களில் 1600 பக்தர்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிற்றுண்டி, மதிய நேரத்தில் சாப்பாடு, வழங்கப்படுகின்றது. திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் 2000 பக்தர்களுக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பக்தர்களுக்கு வழங்கும் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் அன்னதான தயாரிப்பு கூடம் மற்றும் உணவு அருந்தும் மையத்தில் உள்ள ஜன்னல்களுக்கு கொசுவலை அமைக்க வேண்டும் என்ற உணவு பாதுகாப்பு அலுவலர்களின் நிபந்தனையின் அடிப்படையில் உயபதாரர் மூலம் கொசுவலை நேற்று அமைக்கப்பட்டது. இதன் மூலம் பக்தர்கள் அருந்தும் உணவு சுத்தமாகவும், பாதுகாப்பாக இருக்கும் என்று கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
The post திருத்தணி கோயிலில் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்த அன்னதான கூடத்தில் கொசுவலை அமைப்பு appeared first on Dinakaran.