- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வங்காள விரிகுடா
- வேலூர்
- ராணிப்பேட்டை
- கன்னியாகுமாரி
- திருவண்ணாமலை
- திருப்பத்தூர்
- திருநெல்வேலி
- மதுரை விமான நிலையம்
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் நேற்று சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருநெல்வேலி பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. அதேநேரத்தில் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் 99 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெயில் காணப்பட்டது.
மேலும், மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து வருவதால், அது இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இன்று முதல் 29ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
The post தமிழகத்தில் 29ம் தேதி வரை லேசான மழை appeared first on Dinakaran.