- திம்பம் மலை சாலை
- சத்தியமங்கலம்
- 15 வது கூம்பு ஊசி வளைவு
- சத்தியமங்கலம்
- பன்னாரி அம்மன் கோயில்
- சதியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை
- எரோடு மாவட்டம்
- தமிழ்நாடு கர்நாடக
- திம்பம் நெடுஞ்சாலைகள்
- தின மலர்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை 15வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இன்று காலை கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து மக்காச்சோளம் பாரம் ஏற்றிய லாரி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. பதினைந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து உள்ளானது. இதில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இத்தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாரி சாலையோரம் கவிழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. விபத்துக்குள்ளான லாரியை கிரேன் இயந்திரம் மூலம் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.