- திண்டுக்கல் ஏ.
- திருப்பதி
- யூனியன் மாநிலத்தின் சுகாதார திணைக்களம்
- பால் நிறுவனம்
- திண்டுக்கல்
- திருப்பதி
- ஒன்றியத்தின் சுகாதார திணைக்களம்
- லட்டு பிரசாதம்
- திருப்பதி யேமலையன் கோயில்
- ஆர்.
- ஐரோப்பிய ஒன்றிய சுகாதார
- தின மலர்
திண்டுக்கல்: திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது தெரியவந்தது. திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சியில் நெய்க்கு பதிலாக விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். லட்டுக்கு பயன்படுத்தப்படும் உபபொருட்களில் தரமற்ற பொருட்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டு உள்ளதாக உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரிவிக்கபட்டது.
இதனை தொடர்ந்து திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த 4 நிறுவனங்களிடம் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பட்டது. இதனை அடுத்து திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் நெய்யில் கலப்படம் இருந்தது பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.