×
Saravana Stores

தமிழ்நாட்டில் ஓராண்டில் 18% உயர்ந்த உடல் உறுப்பு தானம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்திற்கு பதிவு என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இதுவரை 270 பேர் தங்களது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கியுள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 2008ம் ஆண்டு கலைஞர் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் பெறும் மகத்தான திட்டத்தினை தொடங்கி வைத்தார். அந்த வகையில் பொதுமக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.

அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது. தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதே போல், கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி, முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதன் பின், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் இதனைப் பின்பற்றி வருகின்றன.இந்த நிலையில் மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தியில், “விடியல் எனும் தானியங்கி செயலி மூலம் உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்யலாம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் மியாட் மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்துள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ஓராண்டில் 18% உயர்ந்த உடல் உறுப்பு தானம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்திற்கு பதிவு என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,K. ,Stalin ,Minister Maj. ,Subramanian ,Chennai ,India ,Minister Maj. Subramanian ,Dinakaran ,
× RELATED தென் தமிழ்நாட்டுக்கே உரிய...