- இலங்கை
- எல்.முருகன்
- தூத்துக்குடி
- மாநில மத்திய அமைச்சர்
- மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர்
தூத்துக்குடி: இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் சுமூக உறவை கடைப்பிடிப்போம் என்று தூத்துக்குடியில் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் கூறினார். திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் தந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி:
சென்னை கூவம் ஆற்றை சீர்ப்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும், எந்த சார்பு நிலை இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். கடைப்பிடிப்போம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் சுமூக உறவை கடைப்பிடிப்போம்: எல். முருகன் பேட்டி appeared first on Dinakaran.