×

மகாராஜா, கொட்டுக்காளி உள்ளிட்ட 6 தமிழ் படங்கள் இந்தியா சார்பில் 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!!

டெல்லி : 6 தமிழ் படங்கள் உள்பட 28 படங்களை இந்தியா சார்பில் 2025ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அளித்த பேட்டியில், “2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் திரைப்படங்கள் செல்கிறது. மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா படங்களை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 12 இந்தி திரைப்படங்கள், 4 மலையாள திரைப்படங்கள், 3 மராத்தி, 6 தெலுங்கு படங்கள் அனுப்பப்பட உள்ளன. ஒரியா மொழி படம் ஒன்றையும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

6 தமிழ் திரைப்படங்கள் உள்பட இந்தியா சார்பில் 28 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. லாப்பட்டா லேடீஸ், கல்கி 2898, ஆட்டம், ஆடு ஜீவிதம், ஆர்ட்டிகள் 370,அனிமல், உள்ளொழுக்கு, வீர் சவார்கர், சாம் பகதூர் உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு லாப்பட்டா லேடீஸ் படம் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ரஷ்ய திரைப்பட விருது விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்றது.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த கொட்டுக்காளி திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.

The post மகாராஜா, கொட்டுக்காளி உள்ளிட்ட 6 தமிழ் படங்கள் இந்தியா சார்பில் 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Indian Film Federation ,Oscars ,
× RELATED தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...