அகமதாபாத்: நிலவில் 160 கி.மீ. பள்ளம் இருப்பதை சந்திரயானின் பிரக்ஞான் ரோவர் கண்டுபிடித்துள்ளது. சந்திரயான்-3 விண்கல திட்டம் மூலம் இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து வருகிறது. கடந்த 23-ந்தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து பிரக்யான் ரோவர் சுமார் ஆறு மணி நேரம் கழித்து நிலவில் கால் பதித்தது. கால் பதித்ததில் இருந்து பிரக்யான் ரோவர் தனது இலக்குகளை ஒவ்வொன்றாக அடைந்து வருகிறது.
நிலவில் ஆக்சிஜன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள பிரக்யான், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும் போது மூன்று மீட்டர் தொலைவில் ஒரு பள்ளத்தை பார்த்தது.பார்த்தவுடன் சுதாரித்துக் கொண்டு மாற்று பாதையில் செல்லும் திறன் இருந்ததால், அதன் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தரையிறங்கிய ஒரு வாரத்தில் 100 மீட்டரை கடந்து சாதனைப் படைத்துள்ளது ரோவர்.
இதன் வாயிலாக, சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, நிலவில் தடம் பதித்த நான்காவது நாடானது இந்தியா. ரோவர் மூலம் பெறப்பட்ட படங்கள், தகவல்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ., அகலமுள்ள பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவலை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர். ரோவர் 350 கிலோமீட்டர் தொலைவில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த போது தான், பள்ளம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
The post நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ அகலமுள்ள பள்ளம்: சந்திரயானின் பிரக்ஞான் ரோவர் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.