- திமுகா விளையாட்டு மேம்பாட்டு குழு
- தயனிதி மாரன் எம். பி.
- உடுமலை
- விளையாட்டு மேம்பாட்டு குழு
- தயானிதி மாரன் எம். பி.
- தின மலர்
*தயாநிதி மாறன் எம்.பி. வழங்கினார்
உடுமலை : உடுமலையில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான ரேக்ளா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார்.திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான ரேக்ளா போட்டி நேற்று உடுமலை அருகே சாமுராய பட்டியில் நடந்தது.
போட்டி துவக்க விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் தலைமை தாங்கி பேசினார். பொள்ளாச்சி தொகுதி எம்.பி. ஈஸ்வரசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ருத்ரப்பன் வரவேற்றார். திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர்.
இப்போட்டியை தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நேற்று காலை முதலே மாலை வரை போட்டிகள் நடைபெற்றது. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் தூரம் என 2 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரேக்ளா வண்டிகள் பல கலந்து கொண்டன.
குறிப்பாக உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பழனி, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகள் என 510 ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. போட்டி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்தன.
சாலையின் இருபுறமும் பொதுமக்கள் மற்றும் ரேக்ளா ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி பந்தயத்தை பார்வையிட்டனர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.சண்முகசுந்தரம், கோவை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், ரேக்ளா தலைமை சங்க பொறுப்பாளருமான சி.ஜெயபிரகாஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, நகர திமுக செயலாளர் வேலுசாமி, உடுமலை நகர்மன்ற தலைவர் எம்.மத்தின், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வெ.மகாலிங்கம், சி.சியாம் பிரசாத், தலைமை குழு பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.பாபு, நா.ராமசாமி. குமார். எம்.பர்வதவர்த்தினி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.எஸ்.தங்கராஜ். குமரலிங்கம் பேரூராட்சி தலைவர் ஷர்மிளா பானு ஜாகீர் உசேன். பேரூராட்சி மன்ற துணை தலைவர் கே.அழகர்சாமி, அணியின் மாநில துணை செயலாளர்கள் கார்த்திக், பைந்தமிழ் பாரி, பார்த்திபன், நம்பி, நிவேதா ஜெசிகா, ஏ.வி.ஆர். கோபால்ராம், வாசிம் ராஜா, சுரேஷ் ஜெ.மனோகரன், கவுதமன்.
திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆர்.சக்திகுமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வி.ரகுபதி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் டி.எஸ்.பொன்ராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் என். தங்கவேல், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் மா.கண்ணிமுத்து, மகளிர் அணி அமைப்பாளர் செ.அனிதா செல்வராஜ், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் எல்.லதா. திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் கே.ஐயப்பன், ஆர். மோகன்ராஜ், கே.கவின்ராஜ், என்.கனகராஜ், பா.சசிகுமார், எஸ்.ரபியுல்லா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நவீன், ஒன்றிய செயலாளர்கள் மெய்ஞானமூர்த்தி, செந்தில்குமார், செழியன், ராஜமாணிக்கம், கிரி, முரளி, காணியப்பன், கதிர்வேல், கமலக்கண்ணன், பேரூர் செயலாளர்கள் சாதிக் அலி, என். பாலகிருஷ்ணன், ஏ.பாலகிருஷ்ணன், உதயகுமார், ஆறுச்சாமி, அகத்தூர் சாமி, காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமரலிங்கம் பேரூர் செயலாளர் ஆச்சிமுத்து நன்றி கூறினார்.
ரேக்ளாவில் தங்க நாணயம் பெற்றவர்கள்: 200 மீட்டர் பிரிவில் அகிலேஷ், செல்வராஜ் முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும், சதீஷ் மதன்,காளிமுத்து ராஜனுக்கு முக்கால் பவுன் தங்க நாணயமும், நாகராஜ், மருதராஜ் 3-வது பரிசாக அரை பவுன் தங்க நாணயமும்,அகுல், சங்கர் 4-வது பரிசாக கால் பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
இதுபோல் 300 மீட்டர் பிரிவில் சிரவை தம்பி, லோகேஷ் முதல் பரிசு, கருப்புசாமி, சிரவை தம்பி 2- வது பரிசு, பிரனேஷ்,மனோகரன் கோவிந்தராஜ் 3-வது பரிசும், சுரேஷ், ராகுல் பழனிச்சாமி 4-வது பரிசும் வழங்கப்பட்டது. 5 முதல் 20 வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. 21 முதல் 30-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு 20 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.31 முதல் 35-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசாக கோப்பைகள் வழங்கப்பட்டது. இதுபோல் போட்டியில் பங்கேற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ரேக்ளா வண்டியில் சென்ற தயாநிதி மாறன் எம்.பி.
உடுமலையில் நேற்று நடந்த ரேக்ளா போட்டியில் 510 வண்டிகளில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் பங்கேற்ற தயாநிதி மாறன் எம்.பி. ரேக்ளா வண்டியில் சென்றார். போட்டியில் மொத்தம் 510 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் பிரிவுகளில் முதல் பரிசாக தலா ஒரு பவுன் தங்க நாணயமும், 2ம் பரிசாக தலா முக்கால் பவுன் தங்க நாணயமும், 3ம் பரிசாக தலா அரைபவுன் தங்க நாணயமும்,நான்காம் பரிசாக தலா கால் பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
5ம் இடம் முதல் 19ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. 21 முதல் 30 வரை இடம் பிடித்தவர்களுக்கு 20 கிராம் வெள்ளிக்காசு பரிசாக வழங்கப்பட்டது. 30 முதல் 35 வரை இடம் பிடித்தவர்களுக்கு பரிசாக கோப்பைகள் வழங்கப்பட்டன.அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் சார்பில் 10 பேருக்கு ஊக்கப்பரிசாக 20 கிராம் வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது.
இந்த பரிசுகளை தயாநிதி மாறன் எம்.பி. வழங்கினார். அவருக்கு ஏர் கலப்பை உள்ள புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட தயாநிதி மாறன் எம்.பி. ரேக்ளா வண்டியில் சிறிது தூரம் சென்றார். அப்போது வண்டியில் எம்.பி.க்கள் ஈஸ்வர சாமி, பிரகாஷ் மற்றும் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் உடன் இருந்தனர்.
The post திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான ரேக்ளா போட்டி வென்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசு appeared first on Dinakaran.