×

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டால் இதுவே என் கடைசி தேர்தல்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!!

வாஷிங்டன்: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டால் இதுவே என் கடைசி தேர்தல் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நாடு தழுவிய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெறத் தொடங்கியிருந்தாலும், டிரம்ப் ஆளும் ஜனநாயக கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், 2024-ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028-ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

The post 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுவிட்டால் இதுவே என் கடைசி தேர்தல்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : 2024 US presidential election ,Donald Trump ,Washington ,US presidential election ,Kamala Harris ,Democratic Party ,Dinakaran ,
× RELATED அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக...