×

ஓபிஎஸ் கவலை வைத்திலிங்கம் மீது வழக்கு போடுவதா?

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றுபட்ட அதிமுக என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஈடுபட்டுள்ளார் என்றும், அதிமுக விரைவில் ஒன்றிணையும் என்றும் வைத்திலிங்கம் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் வைத்திலிங்கம், எஸ்.பி. வேலுமணியின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவை ஒன்றிணையவிடாமல் தடுத்து அதன்மூலம் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். அந்த கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுக ஒன்றுபடும், வீறுகொண்டு எழும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post ஓபிஎஸ் கவலை வைத்திலிங்கம் மீது வழக்கு போடுவதா? appeared first on Dinakaran.

Tags : OPS ,Vaithlingam ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Vaithilingam ,minister ,SP Velumani ,AIADMK ,Vaithilingam, S.P.… ,Dinakaran ,
× RELATED அரசு அதிகாரிகளை தாக்குவோர் மீது கடும்...