×

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: இந்தியா தொடர்ந்து உயர்கிறது, ஒளிர்கிறது. சென்னையில் நாம் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய செஸ் ஒலிம்பியாடைத் தொடர்ந்து, தற்போதைய 45வது செஸ் ஒலிம்பியாட், புதாபெஸ்த் 2024ல் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இரண்டிலும் தங்கம் வெல்லும் அளவுக்கு இந்திய அணி பயணித்துள்ளது.

தங்கள் எல்லைகளைத் தொடர்ந்து அகலப்படுத்தி, இடைவிடா அர்ப்பணிப்புடன் நமது செஸ் சாம்பியன்கள் உலக அரங்கில் நமது நாட்டுக்குப் பெருமை தேடித் தருவதைக் காண்பது நெஞ்சுக்கு இதமளிக்கிறது. வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள இந்திய அணிக்கு எனது பாராட்டுகள்.

The post செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chess Olympiad ,Chennai ,Mudhalvar Mu. K. Social ,Stalin ,India ,45th Chess Olympiad ,Budapest ,Olympiad ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!