பெய்ரூட்: காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல அண்டை நாடுகளில் இருந்தும் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.இஸ்ரேலை ஒட்டிய லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, எல்லையில் இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது.
இதனால், ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன் பேஜர்கள்,வாக்கி டாக்கிகள் போன்ற மின்னணு சாதனங்கள் வெடித்து சிதறியதால் ஹமாஸ் படையை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றி மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம், பெய்ரூட்டில் உள்ள தஹியே என்ற இடத்தின் மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்லாவின் மூத்த கமாண்டர் உட்பட 37 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில்,நேற்று இஸ்ரேலின் ஹைபா பகுதி அருகே லெபனான் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில்,3 பேர் படுகாயமடைந்தனர். வாகனங்கள் எரிந்தன. வீடுகள் சேதமடைந்தன.
The post இஸ்ரேல் மீது லெபனான் ஏவுகணை வீச்சு: 3 பேர் படுகாயம்,கார்கள் தீப்பிடித்தன appeared first on Dinakaran.