×
Saravana Stores

சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆழ் மூளை தூண்டுதல் குறித்த கருத்தரங்கம்

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனை நரம்பியல் துறை சார்பில் ஆழ் மூளை தூண்டுதல் (‘GAPS மற்றும் Controversies in Deep Brain Stimulation’) என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் பிரபல நரம்பியல் நிபுணர்களான பேராசிரியர் டாக்டர் பி. விஜயசங்கர் மற்றும் ஆழ் மூளை தூண்டுதல் சிகிச்சையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள நிபுணர் டாக்டர் அரவிந்த் சுகுமாரன் ஆகிய இருவர் முன்னெடுப்பில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரும், ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர். ஜென்ஸ் வோல்க்மேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கம் குறித்து டாக்டர். பி.விஜயசங்கர் கூறியதாவது:

ஆழ் மூளை தூண்டல் குறித்த சமீபத்திய மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து இன்று வரையுள்ளவற்றை தெரிந்து கொள்ள இந்த சிறப்பு பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்த சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அவற்றை புரிந்து கொண்டு செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளையும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது. பார்கின்சன் நோயாளிகளுக்கு தற்போதுள்ள நவீன சிகிச்சைகள் பற்றி தெரிவிக்க வேண்டிய கடமை உடல் ஆரோக்கிய நிபுணர்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆழ் மூளை தூண்டுதல் குறித்த கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : on Subconscious Brain Stimulation ,Apollo Hospital ,Chennai. ,Chennai ,Department of Neurology ,Apollo Hospitals ,Prof. ,Dr. ,P. Vijayashankar ,Chennai Apollo Hospital Seminar on Subconscious Brain Stimulation ,
× RELATED அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி