×

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தொட்டக்கலை துறை சார்பில் பொதுமக்களுக்கு இந்த ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி ரேஸ் கிளப்-பிற்க்கு வழங்கப்பட்ட நிலத்தை குத்தகை பாக்கி செலுத்தாததால் தமிழ்நாடு அரசு கைபற்றியது. தமிழ்நாடு அரசு கைபற்றிய நிலத்தில் ரூ.4,832 கோடியில் 118 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னையில் பெரிய அளவிலான பூங்காவை உருவாக்குவது சுற்றுச்சூழல் நிலத்தன்மை,பொது சுகாதரத்தை மேம்படுத்தும் என அரசு தெரிவித்துள்ளது.

 

The post சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அரசாணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Chennai Kindi ,Department of Technology ,Kindi Race Club ,Pyku ,
× RELATED திருச்சியில் கலைஞர் நூலகம்...