×
Saravana Stores

ஈரானின் கிழக்கு பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழப்பு

தெஹ்ரான்: கிழக்கு ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபாஸில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டதால் பயங்கர வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு 9:00 மணியளவில் (1730 GMT) திடீரென வாயு கசிவு ஏற்பட்டபோது, ​​69 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தின் B மற்றும் C ஆகிய இரண்டு தொகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்தனர். சி தொகுதியில் மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அந்தபகுதியில் மீத்தேன் அடர்த்தி அதிகமாக இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தபாஸில் நிலக்கரி சுரங்க வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post ஈரானின் கிழக்கு பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : eastern Iran ,Tehran ,Iran ,eastern ,Dinakaran ,
× RELATED ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்