- கிழக்கு கடற்கரை சாலை
- நெடுஞ்சாலைகள் துறை
- Duraipakkam
- அம்மன்
- கோவில்
- தமிழ்நாடு அரசு
- திருவான்மியூர்
- அக்கரை
துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில், 6 வழி சாலை விரிவாக்க பணிக்காக அம்மன் கோயில் மற்றும் கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றினர். கிழக்கு கடற்கரை சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழித்தடமாக மாற்ற, தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து 2005ம் ஆண்டு ₹10 கோடி நிதி ஒதுக்கியது. இச்சாலை விரிவாக்க பணிக்கான நிலம் எடுப்பு பணியானது பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்நிலையில், இச்சாலை விரிவாக்க பணிக்காக தமிழ்நாடு அரசு 2023ம் ஆண்டு ₹940 கோடி நிதி ஒதுக்கி, நில எடுப்பு பணியினை தொடங்கியது. தற்போது, எங்கெல்லாம் நில எடுப்பு பணிகளில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதோ அங்கெல்லாம், விரைந்து சாலை விரிவாக்கப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த, நில எடுப்பு பணியால் பாதிக்கப்பட்டுள்ள நில உரிமையாளர்களுக்கு இடப்பீட்டு தொகை வழங்கியும், நெடுஞ்சாலைத்துறை அல்லது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நீலாங்கரையில் 120 மீட்டர் 5 மீட்டர் இருந்து சக்தி முத்தம்மன் கோயில் அகற்றப்பட்டது. அதேபோல், ஈஞ்சம்பாக்கத்தில் புலன் எண் 14/2ல் இருந்த அதிமுக அலுவலகம், மருந்தகம், ஹார்டுவேர் கடை மற்றும் பிறகடைகள் கட்டிடங்கள் 100 மீட்டர் நீளம் 5 மீட்டர் அகலமுள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைதுறையினர், நீலாங்கரை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
The post கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.