×

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசு பணிகளுக்காக ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் 823 மையங்களில் போட்டி தேர்வை நடத்துகிறது. 6.39 லட்சம் பேர் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். நேற்று தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்றும் தேர்வு நடக்கிறது.

அரசு போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் இரண்டு நாள்களுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மொபைல் மற்றும் இணைய சேவைகளை மாநில அரசு நிறுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,BJP ,Ranchi ,Jharkhand Staff Selection Commission ,Jharkhand State Govt Jobs ,
× RELATED தேர்வாணைய தேர்வில் முறைகேடு...