புதுடெல்லி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ அனைத்து திரைப்படங்களும், உள்ளடக்கங்களும் எதுவாக இருந்தாலும் புகையிலை எதிர்ப்பு வாசகங்களை ஓடிடி தளங்களிலும் கட்டாயம் காண்பிக்க வேண்டும்.
திரைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்களின் தொடக்கத்திலும், நடுவிலும் புகையிலை பயன்பாட்டின் தீய விளைவுகள் குறித்து 30 விநாடிகள் மற்றும் 20 விநாடிகள் தவிர்க்க முடியாத ஆடியோ விஷூவல் புகையிலை எதிர்ப்பு சுகாதார வாசகங்களை காட்சிப்படுத்த வேண்டும்.
இது பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஓடிடி தளங்களிலும் புகையிலை எதிர்ப்பு வாசகம் கட்டாயம்: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.