சென்னை : ஒரு தமிழன் பிரதமராக பதவியேற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் 2வது பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், “நான் அரசியலுக்கு வந்தது எனக்காக அல்ல. நமக்காக கூட அல்ல. நாளைக்காக…தோற்ற அரசியல்வாதியை கூட நம் மக்கள் நினைவில் வைத்து இருப்பார்கள். தோற்ற அரசியல்வாதி என என்னைதான் கூறுகிறேன். தோல்வி என்பதும் நிரந்தரம் அல்ல, அதேபோல் பிரதமர் பதவி என்பதும் நிரந்தரம் அல்ல.ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது மிகவும் ஆபத்தானது. இது எவ்வளவு பெரிய தவறு என்பது உலக அரசியலுக்கே தெரியும். இந்தியாவிற்கு இது தேவையில்லை”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஒரு தமிழன் பிரதமராக பதவியேற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் : கமல்ஹாசன் appeared first on Dinakaran.