×

மேல்மருவத்தூர் ஊராட்சியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், மேல்மருவத்தூர் ஊராட்சியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி மேல்மருவத்தூரில் நேற்று காலை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அகத்தியன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, ஊராட்சி மன்ற உறுப்பினர் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட திட்ட அலுவலர் மணியன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்து சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில், லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் சோத்துப்பாக்கம், வந்தவாசி சாலை, மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மையே சேவை என வலியுறுத்தி பேரணி சென்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில், தூய்மை சேவை இயக்கத்தை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஊராட்சியில் தொடங்கப்பட்டுள்ள மண்புழு மற்றும் நுண்ணுயிர் உரங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை அங்காடி நேற்று தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை இயற்கை உரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஊராட்சி செயலர் (பொறுப்பு) மலர்விழி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி இறுதியாக வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா நன்றி கூறினார்.

The post மேல்மருவத்தூர் ஊராட்சியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Cleanliness service ,Melmaruvathur panchayat ,Melmaruvathur panchayat, ,Chengalpattu district ,Chittamur ,Panchayat Council ,Deputy Chairman ,Agathiyan ,Union ,Committee ,Yehumalai ,Sridevi ,Melamaruvathur Panchayat Cleanliness Service Awareness Rally ,Dinakaran ,
× RELATED தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி