×

ஆத்தூர் மேம்பாலம் சாலையில் இரு பக்கங்களில் செடிகள் அகற்றம்

புழல்: ஆத்தூர் மேம்பாலம் சாலையின் இரு பக்கங்களிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகள், தினகரன் செய்தி எதிரொலியால், மாநில நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். சோழவரம் அடுத்த காரனோடை – ஆத்தூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் ஆத்தூர் மேம்பாலம் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. மேம்பாலத்தின் மேல் செல்லும் சாலையில் இரண்டு பக்கங்களிலும் செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளித்தது. மேலும், மின்சார விளக்கு கம்பங்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர் என்று தினகரன் நாளிதழில் கடந்த 17ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதன், எதிரொலியாக மாநில நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து ஆத்தூர் மேம்பாலம் சாலையில் இரண்டு பக்கங்களிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி சீர்படுத்தினர். விரைவில் மேம்பாலத்தின் மேலே மின்சார கம்பங்கள் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ் மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநில நெடுஞ்சாலை துறையினருக்கும் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post ஆத்தூர் மேம்பாலம் சாலையில் இரு பக்கங்களில் செடிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Attur flyover road ,PUJAL ,Athur ,Dhinakaran ,Cholavaram ,Karanodai – Athur ,Old Erumai Vettipalayam ,New Erumai Vettipalayam ,Panchayats ,Athur Membalam road ,Dinakaran ,
× RELATED சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில்...