×

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் வழிகாட்டு நிகழ்ச்சி

 

திருச்சி,செப்.21: மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுத்துறைகளிலுள்ள வேலைவாய்ப்பு, ஒதுக்கீடுகள் ெதாடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை மாவட்ட மைய நுாலகத்தில் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட மைய நுாலகம் மற்றம் மாவட்ட மைய நுாலக வாசகர் வட்டம் சார்பில் உடல் சார்ந்த குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு, கண்பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள்,

அவர்களுக்கு ஒதுக்கீடுகள் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை (செப்.22) காலை 11 மணிக்கு மாவட்ட மைய நுாலகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம், மேலும், விவரங்களுக்கு 93447540136 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மைய முதல் நிலை நுாலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

The post திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் வழிகாட்டு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Central Pulagak, Trichy District ,Trichy ,Central and State Government Departments for ,Pulagak ,Trichy District Central Pulagam ,District Central Pulaka Reader Circle ,Trichy District ,Central Bulaka ,Dinakaran ,
× RELATED திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை...