×
Saravana Stores

சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

சென்னை: நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை மாற்றி வடிவமைத்த சர் ஜான் மார்ஷலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ெவளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: மிகச் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924ம் ஆண்டு சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்தார்.

ஜான் மார்ஷல் அவர்களது பங்களிப்பை நன்றிப்பெருக்குடன் பின்னோக்கி அவருக்கு இந்த நாளில் நன்றி கூறுகிறேன். சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானத்துடன் அதனை அவர் திராவிட இனத்துடன் தொடர்புபடுத்தினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கண்டுபிடிப்பின் நூற்றாண்டினை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்குடனும், சர் ஜான் மார்ஷல் முழுவுருவச் சிலையினை தமிழ்நாட்டில் நிறுவியும் கொண்டாடப்படும் என எனது அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Sir ,John Marshall ,Indus Valley Civilization ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,M. K. Stalin ,Indian ,Dinakaran ,
× RELATED அலிகர் முஸ்லிம் பல்கலை. சிறுபான்மை...