×
Saravana Stores

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஜூனியர் டாக்டர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர். மேற்குவங்கத்தில் உள்ள ஜூனியர் டாக்டர்கள், கொல்கத்தா மருத்துவமனையில் சக பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததைக் கண்டித்து கிட்டத்தட்ட 42 நாட்களாக ெதாடர்ந்து மாபெரும் போராட்டத்தை நடத்தினர். நாட்டையே உலுக்கிய ெபண் மருத்துவர் பலாத்கார கொலை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. தானாக முன்வந்து வழக்குபதிந்து விசாரித்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பணிக்கு திரும்பு மாறும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனாலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் கூறினர். இவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், நாளை முதல் ஜூனியர் டாக்டர்கள் பணிக்கு திரும்புகின்றனர். அதேநேரம் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதன்மூலம் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்த ஜூனியர் மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு தலைவணங்க நேரிட்டது.

முன்னதாக ஜூனியர் டாக்டர்கள் பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை நடந்த 5 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டார். அதன்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், துணை கமிஷனர் (வடக்கு) அபிஷேக் குப்தா உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், மாநில சுகாதாரப் பணிகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோரும் மாற்றப்பட்டனர். முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மேற்குவங்க ஜூனியர் டாக்டர்கள் அமைப்பு தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றது.

The post நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர் appeared first on Dinakaran.

Tags : KOLKATA ,West Bengal ,Dinakaran ,
× RELATED டிராவல் பண்ணது ஒரு குத்தமாயா… பெண்கள்...