×

தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 45ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக முதல்வருக்கு பல்வேறு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், புத்தாண்டு கொண்டாட்டம் குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும், அவர்களோடு தொடர்பில் இருந்த 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது. புதிதாக தொற்று உறுதியான 11 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 10 பேரில் 6 பேர் சென்னை கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மருத்துவமனையில் ஒருவர், கன்னியாகுமரி, திருவாரூர், தி.மலை, தலா ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 30 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்து வீடி திரும்பிய நிலையில் 15 பேர் சிகிச்சையில் உள்ளனர். …

The post தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 45ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...