×
Saravana Stores

தாவரவியல் பூங்கா சாலையில் அபாயகர மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்

Botanical Garde, trees Removedஊட்டி : தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக, ஊட்டி மற்றும் குந்தா தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும்.

இதனால், பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பது வாடிக்கை. அதேபோல், சில இடங்களில் மரங்கள் பொதுமக்கள் அல்லது வாகனங்களின் மேல் விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இம்முறையும் கடந்த ஜூலை மாதம் துவங்கி ஒரு மாத காலமாக மழை பெய்தது. இந்த மழையின் போது, பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் அபாயகரமான மரங்களை கண்டறிந்து அவைகளை அகற்றும் பணியில் கடந்த 2 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் இளைஞர் விடுதி முன் புறம் இருந்த ராட்சத கற்பூர மரங்கள் கடந்த மாதம் அகற்றப்பட்டது.
இருந்த போதிலும் இச்சாலையில், பிற்படுத்தப்பட்டோர் மாணவிர் விடுதி, காதுகேளாதோர் பள்ளி மற்றும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வளாகம் அருகே கற்பூர மரங்கள் மற்றும் சாம்பிராணி மரங்கள் இருந்தன.

இவைகள் விழுந்தால், பூங்கா செல்லும் நடைபாதை மற்றும் சாலையில் விழும் அபாயம் நீடித்தது. இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் காதுகேளாதோர் பள்ளி மற்றும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன்பு இருந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post தாவரவியல் பூங்கா சாலையில் அபாயகர மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Botanical Garden Road ,BOTANICAL PARK ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரிய புல்...