- ஹாக்கி மற்றும் கபடி
- முதல்வர் கோப்பை
- விளையாட்டு
- பெரம்பலூர்
- ஹாக்கி
- கபாடி
- முதல் அமைச்சர்
- கோப்பை
- தமிழ்நாடு
- பெரம்பலூர் மாவட்டம்
- பாரத ரத்னா
- டாக்டர்
- எம்.ஜி.ஆர்
- CM கோப்பை விளையாட்டு ஹாக்கி
- கபடி
- தின மலர்
பெரம்பலூர், செப்.20: பெரம்பலூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி, கபடி போட்டிகள் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட அளவிலான, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக் கான விளையாட்டுப் போட்டிகள், பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த 10 ம்தேதி துவங்கப்பட்டு தினமும் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (19ம்தேதி) முதல் அமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்களுக் கான(Hockey) வளைகோல் பந்தாட்ட விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிகளை பெரம்பலூர் ரோவர் உடற் கல்வித் துறைத் தலைவர் கண்ணன், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வி துறைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த போட்டி யில் பெரம்பலூர் ரோவர் கல்லூரி (உடற் கல்வி) முதலிடம் பெற்றது.
பெரம் பலூர் ரோவர் கல்லூரி என்சிசி பிரிவு இரண்டாம் இடம்பெற்றது. கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில், பெரம்பலூர் ரோவர் பிஷியோதெரபி கல்லூரி முதலிடம் பெற்றது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் இடம் பெற்றது. 32 அணிகள் பங்கேற்ற கல்லூரி மாணவர்களுக் கான கபடி விளையாட்டுப் போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி முன்னிலையில், பெரம்ப லூர் மாவட்ட கபடிக் கழகத் தலைவர் முகுந்தன் தொடங்கி வைத்தார்.
செயலாளர் ரமேஷ் முன் னாள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு வாழ்த் துரை வழங்கினர். இந்த கபடி விளையாட்டுப் போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரி முதலிடமும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் இடமும், பெரம்பலூர் ரோவர் நர்சிங் கல்லூரி மூன்றாமிடமும் பெற்றன. போட்டிகளை பெரம்பலூர் மாவ ட்ட அளவில் உள்ள கல்லூரிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர்கள், பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.
The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு கல்லூரி மாணவர்களுக்கு ஹாக்கி, கபடி போட்டிகள் appeared first on Dinakaran.