×

நிழல் உலக தாதா பெயரை சொல்லி சல்மான்கான் தந்தையை மிரட்டிய பெண் கைது

மும்பை: பிரப இந்தி நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம்கான் பாந்திராவில் வசித்து வருகிறார். நேற்று காலை பாந்திரா பேண்ட்ஸ்டாண்ட் கடற்கரை பகுதியில் அவர் நடைபயிற்சி செய்தார். அப்போது அங்கு வந்த 2 பேர்,நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயை உங்களிடம் அனுப்பவா? எனக் கேட்டு மிரட்டல் விடுத்தனர். இதை கேட்ட சலீம்கான் அதிர்ச்சியடைந்தார்.உடனே பைக்கில் வந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாந்திரா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண் உட்பட 2 பேரை கைது செய்தனர்.

The post நிழல் உலக தாதா பெயரை சொல்லி சல்மான்கான் தந்தையை மிரட்டிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Salman Khan ,Shadow World ,Dada ,Mumbai ,Salim Khan ,Bandra ,Bandra Bandstand ,Lawrence Bishnoi ,
× RELATED மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கொலையில்...