ஒட்டாவா: கனடாவில் படிப்பதற்காக வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் அனுமதியை குறைக்க உள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடாவின் பிரதர் ஜஸ்டின் ட்ரூட்டோ தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்களுக்கு 35சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் அனுமதி வழங்கப்படும். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறையும். பொதுமக்கள் குடியேறுவது நமது பொருளாதாரத்திற்கு நன்மை தரும் விஷயமாகும்.
எனினும் மோசமான நபர்கள், மாணவர்களை சாதகமாக பயன்படுத்தி இதனை துஷ்பிரயோகம் செய்யும்போது அதனை ஒடுக்குவதற்கான நடவடிக்கை கட்டாயமாகிறது. தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது\\” என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய மாணவர்கள் அதிகம் படிக்க விரும்பும் வெளிநாடுகளில் கனடாவும் ஒன்றாகும். இந்நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
The post வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி குறைப்பு கனடா அரசு அதிரடி appeared first on Dinakaran.