×

திருத்தணி அருகே மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் கசிவு: டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம்

திருத்தணி: திருத்தணி அருகே மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பைப் லைனில் கசிவு ஏற்பட்டு சுத்தமான தண்ணீர் தேங்கி நிற்பதால், டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுக்க மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் சுகாதார மற்றும் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீரோற்றும் பைப்லைன் உடைந்து தொட்டியின் கீழ் பல நாட்களாக நல்ல தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால், அந்த சுத்தமான தண்ணீரில் கொசு முட்டையிட்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பைப் லைன் உடைந்து ஏற்பட்டுள்ள கசிவை சீரமைத்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post திருத்தணி அருகே மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் கசிவு: டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani ,Tiruvallur district ,District Collector ,Dr. ,Prabhu Shankar ,
× RELATED 1,014 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள...