×

பனீர் கச்சோரி

தேவையானவை:

துருவிய பனீர் – ஒரு கப்,
மைதா மாவு – ஒரு கப்,
சேமியா – கால் கப்,
ஓமம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,
வறுத்த எள் – 2 டேபிள் ஸ்பூன்,
பொட்டுக் கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்,
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லி – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மைதா மாவு, உப்பு, சேமியா வுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, ஓமம் தாளித்து கொள்ளவும். துருவிய பனீர், வறுத்த எள், பொட்டுக் கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, கொத்த மல்லி, உப்பு இவற்றுடன் தாளித்த ஓமம், பெருங்காயத் தூள் சேர்த்துப் பிசையவும். மைதா மாவு கலவையை சிறிய கிண்ணம் போல் செய்து, அதனுள் பனீர் கலவையை வைத்து மூடி வட்ட வடிவமாக தட்டவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, வட்ட வடிவமாக தட்டி வைத்த வற்றை இரண்டு இரண்டாக போட்டு பொரித்தெடுத்தால்… சுவையான கச்சோரி ரெடி.

The post பனீர் கச்சோரி appeared first on Dinakaran.

Tags :
× RELATED கலாக்காய் ஜூஸ்