திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இருந்த தற்காலிக கழிவறைகளால் துர்நாற்றம் ஏற்பட்டதால், தற்போது நிரந்தரக் கழிவறைகள் கட்டப்பட உள்ளன. ஆனால், கோயில் உற்சவ பாதையாக இருப்பதால், சிரமம் ஏற்படும். ஆகவே திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு மற்றும் கிழக்கு உத்திர வீதிகளில் கழிப்பறை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க கோரி திருச்சி ஸ்ரீரங்கம் நகர்நல கூட்டமைப்பின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது; ஸ்ரீரங்கம் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் கழிவறை கட்டும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு உத்தரவிட்டது. மேலும் வழக்கு தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணை உத்தரவிட்டனர்.
The post திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.