×
Saravana Stores

பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலையான விவகாரம்; கொல்கத்தாவில் 2வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: தொடரும் பயிற்சி டாக்டர்களின் போராட்டம்


கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் பயிற்சி டாக்டர்களின் போராட்டம் தொடர்கிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி, கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ஏற்று கொண்டார். மம்தா மீதான நம்பிக்கையை மேற்குவங்க மக்கள் இழந்து விட்டனர். இதனால்தான் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜ தொடர்ந்து போராடி வருகிறது என்று பாஜ மாநில தலைவர் கூறினார். இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை ஜூனியர் டாக்டர்கள் கலந்தாலோசனை நடத்தினர்.

அதன்படி, ‘எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் மற்றும் வேலை நிறுத்தப் பணிகள் தொடரும். மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்’ என ஜூனியர் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனை ஜூனியர் டாக்டர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்குவங்க அரசின் அதிகாரிகளுக்கும், ஜூனியர் டாக்டர்களுக்கும் இடையே நேற்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இது தோல்வியில் முடிவடைந்தது. கூட்டத்தின் எழுத்துப்பூர்வ அறிக்கையை அரசு கொடுக்க மறுத்ததை தொடர்ந்து, டாக்டர்கள் குற்றம் சாட்டினர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்பு குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவுகளை அரசு வெளியிடும் வரை, தங்களது போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தை தொடர உள்ளோம் என தெரிவித்தனர்.

The post பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலையான விவகாரம்; கொல்கத்தாவில் 2வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: தொடரும் பயிற்சி டாக்டர்களின் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,RG Kar Medical College Hospital ,Kolkata, West Bengal ,
× RELATED என் மீது பொய் வழக்கு: பெண் டாக்டர் கொலை குற்றவாளி கதறல்