சென்னை: குருப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று எடப்பாடி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு: தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6,244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வை கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினை கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post குருப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.