×
Saravana Stores

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, தனது வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. பெடரல் வங்கியின் எப்ஓஎம்சி வாக்கெடுப்பு நடத்தியது. இதனடிப்படையில், 11-1 என்ற ஆதரவின் அடிப்படையில் இந்த வட்டி குறைப்பை அமலுக்கு கொண்டு வருகிறது. ஆனால் கவர்னர் மிஷெல் போமன் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், 0.25 சதவீதம் வட்டி குறைத்தால் போதுமானது என்று கூறியுள்ளார். இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும்.

இதன்மூலம், தனிநபர் கடன், கிரேடிட் கார்டு கடன் மற்றும் கார் உள்ளிட்ட அடமான கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக கொரோனா தொற்று பரவல் சமயத்தில் வட்டி விகிதத்தை பெடரல் வங்கி குறைத்திருந்தது. தற்போது, 4 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியை குறைத்துள்ளது. இந்தாண்டு இறுதியில் அமெரிக்கா அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் பொருளாதார சாதனையை முன்னிலைப்படுத்த முயன்று வரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு இது சாதகமான ஒன்றாக அமைந்துள்ளது.

The post அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு appeared first on Dinakaran.

Tags : US Federal Bank ,Washington ,Federal Bank ,United ,States ,FOMC ,Federal Bank of America ,Dinakaran ,
× RELATED நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை;...