- முதல் அமைச்சர்
- விருதுநகர் பட்டாசு ஆலை
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- விருதுநகர்
- கே. ஸ்டாலின்
- குருமூர்த்தி
- சிவகாசி அரசு மருத்துவமனை
- விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
- தின மலர்
சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்தி என்பவருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். 100% தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குருமூர்த்திக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஆணையிட்டார்.
மேலும் வெளியான அறிக்கையில்; “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (19-9-2024) காலை சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் அப்பையநாயக்கன்பட்டி கிராமம், ஆகாஷ் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 27) த/பெ. கணேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் நூறு சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் குருமூர்த்தி (வயது 19) த/பெ. பாண்டி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 இலட்சம் ரூபாயும், நூறு சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் குருமூர்த்தி என்பவருக்கு 2 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.